Friday, December 23, 2011
சலனக் குறிப்புகள்
Posted on 11:32 PM by நீச்சல்காரன்
எரிகிற கொள்ளியில்
சுள்ளிகள் எடுத்து
எரிக்க முனைந்தால்
பொசுங்கியது ஆசை
இது தான் வெற்றியென்று
முடித்துக் கொள்ள
முடியாமல் வெற்றிகரமாக
தோல்வி கொள்கிறேன்
கொதிக்கும் நீரில்
குதித்தாடும் குமிழ்கள்
வாய்பிளந்து மரணத்தை
குடிக்கும்
கற்பூரத்தை சர்க்கரை
என நிருபிக்க
சொன்ன பொய்கள்தான்
அதை காற்றிலே கரைத்துவிட்டது
புதிராக இருந்தாலும்
ஒரு திசை போதும்
மற்றவற்றை காட்டிக்கொடுக்க
திறந்திருந்த ஒன்றை
திறந்து வைத்தவர்
யாரென்கிறது
ஆற்றுப் பாலத்து கல்வெட்டு
ஊரெல்லாம் தூங்கிக்
கொண்டிருக்க மனித இனத்தையே
உலுப்பியது அலார ஒலி
திண்ணை இதழிலும் படிக்கலாம்
கருத்துரிமையுண்டு
Loading...
வாக்குரிமையுண்டு
தகுதியிருந்தால் ஓட்டுப் போட்டுச்செல்லுங்கள் நண்பர்களேபகிர்வுரிமையுண்டு
Subscribe to:
Post Comments (Atom)
இந்தப் பக்கத்திலிருப்பவை காப்புரிமைபெற்றது,
அதனால் இவற்றை நகல் எடுத்து பயன்படுத்தினால் அவற்றுடன் இந்த பக்கத்தின் முகவரியை கட்டாயம் கொடுக்கவும்,
நன்றி
5 Blogger Response
அருமை
இன்றய ஸ்பெஷல்
நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு
"புதிராக இருந்தாலும்
ஒரு திசை போதும்
மற்றவற்றை காட்டிக்கொடுக்க"
அருமையான வரிகள் நண்பரே! நன்றி!
படிச்சீங்களா?:
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
புதிராக இருந்தாலும்
ஒரு திசை போதும்
மற்றவற்றை காட்டிக்கொடுக்க
>>
ரசித்தேன்
ஃஃஃஃபுதிராக இருந்தாலும்
ஒரு திசை போதும்
மற்றவற்றை காட்டிக்கொடுக்கஃஃஃஃ
வாழ்க்கையின் பல மறுதலிப்புகளை வரிகளாக்கி மன ஓட்டத்தை முடக்கிய வரிகள்...
நன்றீங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
Post a Comment