Tuesday, July 27, 2010

மிடில் கிளாஸ் கவிதை

Posted on 7:51 PM by நீச்சல்காரன்

சிகையலங்காரம் தாளிக்கும் 
எண்ணெய் பூச்சுக்களும்
உடையலங்கோலமாக்கும் 
விடையற்ற உடுப்புக்களின்
தெளிப்புத் திரவங்களும்
நுனிமூக்கைத் துளைத்து
பொருளாதார மந்தநிலையிலும்
'நுகர்'வோர் நலன் காக்கிறது.

சலுகைகள் மற்றும் இலவசங்கள் 
சத்தம் மாறாமல் வழங்கப் படுகிறது
வறுமையும் விலையேற்றமும்
அர்த்தம் மாறாமல் ஓட்டிக்கொண்டதை
வாங்கியப்பின்னரும் உணரமுடியவில்லை.

பட்டாணி மடித்துக் கொண்டுவந்த 
பார்சல் தாளின் பத்தியொன்றில்
துப்புரவுத் தொழிலாளியின் சம்பள
உயர்வுச் செய்தி.
கடைசியில் காகிதத்தை கசக்கி
நடுரோட்டில் குப்பையாக்கிவிட்டு வந்தேன்.

அதிகாலை மழையில் நனைக்கப்பட்ட  
நாளிதழுக்காக சண்டை போட அந்த
சிறுவன் நாளை கிடைப்பான்
அவன் வீடும் அதே மழையில் நெளிந்துப் 
போனதை கொஞ்சம் மறந்துகொள்வோம்.

கருத்துரிமையுண்டு

Loading...

வாக்குரிமையுண்டு

தகுதியிருந்தால் ஓட்டுப் போட்டுச்செல்லுங்கள் நண்பர்களே

பகிர்வுரிமையுண்டு

9 Blogger Response

. ஜில்தண்ணி - யோகேஷ் Says....

விலைவாசி - எண்ணெய் பூச்சு

அருமையான வெளிப்பாடு :)

. Chitra Says....

பட்டாணி மடித்துக் கொண்டுவந்த
பார்சல் தாளின் பத்தியொன்றில்
துப்புரவுத் தொழிலாளியின் சம்பள
உயர்வுச் செய்தி.
கடைசியில் காகிதத்தை கசக்கி
நடுரோட்டில் குப்பையாக்கிவிட்டு வந்தேன்.


..... எதார்த்தம்..... சராசரி மனிதனின் மன நிலையை வெளிப்படுத்தும் வரிகள்.

. சி. கருணாகரசு Says....

னடுத்தரத்த பற்றி முதல் தரமா எழுதியிருக்கிங்க..... பாராட்டுக்கள்.

. சி. கருணாகரசு Says....

நடுத்தரத்த பற்றி முதல் தரமா எழுதியிருக்கிங்க..... பாராட்டுக்கள்

.
gravatar
நீச்சல்காரன் Says....

@ஜில்தண்ணி - யோகேஷ்,
@chitra,
@வெறும்பய,
@kolundhu,
@சி. கருணாகரசு
உங்கள் கருத்துகள் கொண்டு பக்கத்தை இன்னும் அலங்கரித்ததற்கு நன்றிகள்.

. விந்தைமனிதன் Says....

நல்லாருக்குங்க.. இயல்பான வார்த்தைகள்!

. மங்குனி அமைச்சர் Says....

சலுகைகள் மற்றும் இலவசங்கள்
சத்தம் மாறாமல் வழங்கப் படுகிறது///

இலவசங்களில் விலை போய்விட்டோம் நாம்

உங்கள் கவனத்திற்கு
இந்தப் பக்கத்திலிருப்பவை காப்புரிமைபெற்றது,MyFreeCopyright.com Registered & Protected அதனால் இவற்றை நகல் எடுத்து பயன்படுத்தினால் அவற்றுடன் இந்த பக்கத்தின் முகவரியை கட்டாயம் கொடுக்கவும், நன்றி