Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Friday, December 11, 2009



முன்கதை (part 1) சுருக்கம்:
புலிகேசி தான் பார்த்திருந்த வேலையை இழந்து வேலை தேடுகிறார்.
இனி...
-----------------------பின்னணி இசை-------------------

{வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வரிசையில் நிற்கிறார் புலிகேசி}
"ஐயா இந்த டையை கட்டிவிடுங்கள் தயவு செய்து கட்டிவிடுங்கள்"
"சரி அப்படியென்றால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் உனக்கு டபுல் நாட் போட்டு கட்டிவிடுவேன்"
"டபுல் நாட்டா அப்ப டபுல் ஓகே கேளும்"
"மௌசுக்கெல்லாம் மாஸ்க் போட்டால் கர்ஸரெல்லாம் காணாமல் போகும் அதுயென்ன?"
"இந்த ரகசியத்தை சொல்லிதான் டைய் கட்டணுமென்றால் தேவையேயில்லை"
"நண்பா! எனக்கு மட்டுமாவது அந்த ரகசியத்தை சொல்லேன்"
"அப்படியா! அப்படியென்றால் இந்த கேள்விக்கான பதில்தான் இதற்கான விடை ஜாவா தெரிந்தவரெல்லாம் கோவா போனால் புவ்வாவுக்கு என்ன செய்வார்?"
{'கோபமாக திட்ட'}
"ஏய்! வாயால் திட்டக்கூடாது புத்தியை தீட்டணும்"
"வேலை கிடைசிருச்சு வேலை கிடைசிருச்சு"
வரிசைவாசிகள்: "எங்கே!"
வரிசைவாசிகள்:"யாருக்கு யாருக்கு?"
"யாருக்குமில்லையா இவனுக்கு டைய கட்டிவிடாதனால சும்மா நம்மலை கலாய்கிறான்யா.
இவனை இங்கயிருந்து துரத்துங்க சார்"
"ஐய்யோ துரத்தாதிங்க துரத்தாதிங்க"
-----------------------பின்னணி இசை-------------------

ராஜகுரு:"கூகிள் என்ற தேடுதளத்திருந்து தேடினால் வேலைகிடைக்கலாம் புலிகேசி"
"அப்படியே செய்கிறேன் இராஜ குருவே! யாரடா அங்கே! நமது சைக்கள் படையை தயார்செய்யுங்கள் உடனே தேடுதலை ஆரம்பிப்போம்"

"மன்னா! உங்களை இன்டர்வூக்கு கூப்பிட்டு ஆர்குட்டில் அழைப்புவந்திருக்கு மன்னா"
"அப்படியா மகிழ்ச்சியடா! என்னுடன் இன்டர்வூக்கு எத்தனைபேர் வருகிறார்கள்"
"சுமார் 3 பேர் மன்னா"
"அந்த பென் டிரைவ போட்டு கேள்விகளை எடுங்கள் "
"மன்னா பென் டிரைவ் கம்ப்பூட்டருக்குள்ளே போகமாட்டேங்கிறது"
"எங்கேடா அந்த ஹர்ட்வேர் மெக்கானிக்"
"மன்னியுங்கள் மன்னா! நேரம் கை கூடிவரவில்லை அதனால் சரியாக உங்கள் சிஸ்டத்தை அஸம்பிலி செய்யவில்லை"
"யாரடா அங்கே இவனை சைக்கள் மெக்கனிக் கடையில் விட்டு பெண்ட் எடுங்கள். சரி அந்த சிடியை எடுங்கள் அமைச்சரே"
"மறந்து வீட்டுலேயே விட்டுவிட்டேன் மன்னா"
"நீயெல்லாம் ஒரு அமைச்சர்! சரி கேள்விகளை டவுன்லேட் செய்து ப்ரிண்ட் எடுங்கள்"
"மன்னா ப்ரிண்டரெல்லாம் பக்கத்து ஊருக்கு கலியாண பத்திரிக்கை அடிக்க வாடகைக்கு போயிருக்கு மன்னா!"
"ஐயோ! பழைய புத்தகங்களை எடுத்து முக்கியமான கேள்விகளை பிட் எழுத ஆரம்பிங்கள்"
"மன்னா பழைய புத்தகத்திற்கு தாங்கள் அப்போதே பேரிச்சம்பழம் வாங்கி தின்றுவிட்டீர்கள்"
"என் போதாத காலம். அவசரத்தில் கையும் ஓடல காலும் ஓடல."
-----------------------பின்னணி இசை-------------------

{புலிகேசியுடன் தொலைபேசியில் அவரது அமைச்சர்}
"மன்னா தலைமை அதிகாரி என்ன கேள்வி கேட்டார்?"
"அவர் எதுவும் கேட்கவில்லை இந்த சிபியுவை பிரித்துபோட்டு சேர்க்க சொன்னார்
என்ன செய்வதென்றே தெரியவில்லை அமைச்சரே!"
"அங்கே கணினியறிவேயில்லாமல் பலரிருக்க இங்கே தனியொருவனுக்காக இப்படி கணினி சிபியுவை பிரித்து போட்டுள்ளனரே"
"மன்னா நான் வேண்டுமானால் நமது அரசவை ஹர்ட்வேர் மெக்கானிக்கிடம் ஆலோசனை கேட்கவா!"
"யாரு அந்த மெக்கானிக்க? சரி அவசரத்திற்கு பாவமில்லை கூப்பிடு"
"மன்னா என்னை மன்னியுங்கள் எனக்கும் மதர்போர்ட் பற்றி முழுமையாக தெரியாது. நான் வாங்கி கொடுத்த பாகங்களே உங்களுக்கு கேள்வியாக வந்ததென்று கேள்விபட்டு மனம் வருந்துகிறேன் மன்னா"
"அப்படியா இதை நீதான் வாங்கிவந்தாயா! இதை முன்னமே சொல்லியிருக்கலாமே Hardware is not suitable என்று சொல்லி வேலையை வாங்கியிருப்பேனே"
-----------------------பின்னணி இசை-------------------

{வேலையை வாங்கிய பின் ஆபிஸிலிருந்து,}
"எப்படியோ வேலை வாங்கியாகிவிட்டது இனி நான் கட்டளையிடவேண்டிய தருணம் இங்கே போய் என் கட்டளையை பாருங்கள்"
முன்கதை (part 1)
இந்த பதிவு எனது 33வது பதிவு

4 மறுமொழிகள்:

ப்ரியமுடன் வசந்த் said...

செம்ம தல இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன் ப்ப்பா முடில...

கமலேஷ் said...

something different...very nice...

நீச்சல்காரன் said...

பிரியமுடன்...வசந்த்,
கமலேஷ்,
தங்கள் கருந்துக்கு நன்றிகள்
கணினியுடனான தொடர்பு எனக்கு நீடிப்பதில்லையென்பதால் காலம்கடந்த பதிலுரையிடுவதற்கு மன்னிக்கவும்

Anonymous said...

Sooooooooooooper